ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே கோட்டா நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடத்தின் 2வது மாடியில் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது வருமான வரி சோதனையின்போது பிடிபட்ட தங்கம் இந்த அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

நேற்றிரவு இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டு பெட்டகத்தில் இருந்த சுமார் 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அள்ளிச் சென்றுவிட்டர்னர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]