டில்லி:
‘‘அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும்’’ என்று நிர்பயா தாய் கூறியுள்ளார்.
2012ம் ஆண்டு டில்லியில் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், ‘‘12 வயது வரையிலான சிறுமிகள் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது சிறந்த முடிவு.
அதேசமயம் கூடுதல் வயதான பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்துக்கு தீர்வு என்ன?. பாலியல் பலாத்காரத்தை போல் கொடிய குற்றம் எதுவும் இல்லை. இதை விட நீண்ட வேதனை எதுவும் இருக்க முடியாது. அதனால் அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும்’’ என்றார்.