
கன்யாகுமரி
கன்யாகுமரியில் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கன்யாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம்; குளச்சல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கடல் சீற்றத்துடல் உள்ளது. பல இடங்களில் கடல் அலைகளின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் கடல்நீர் வீட்டுக்குள் புகுந்ததால் அங்குள்ளவர்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கான முகாம் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் அறிவ்த்துள்ளார்.
கொட்டில்பாடு நவஜீவன் காலனியில் உள்ள ஜெபக்கூடம் அருகே உள்ள வீட்டின் பின்பகுதி கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்தது. வீட்டில் உள்ளோர் உடனடியாக ஓடி வெளியே வந்ததால் யாருக்கும் காயம் இல்லை. மேலும் அருகில் உள்ள தோட்டங்களிலும் கடல் நீர் புதுந்துள்ளது.
தேங்காய்ப் பட்டினம் இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்ட 5 மீன் பிடி படகுகள் கடல் அலையில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகலில் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப் பட்டோர் உடனடியாக முகாமுக்கு மாற்றப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]