டில்லி:

நிரவ் மோடி, மெகுல் சோக்சி மீது ஹாங்காங் உயர்நீதிமன்றத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது.

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர். இருவரும் ஹாங்காங்கில் பதுங்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

நிரவ் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் ஹாங்காங் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]