டில்லி:

வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னை அருகே பூந்தமல்லியில் செயல்பட்டு வந்த நோக்கியா தொழிற்சாலை கடந்த 2014ம் ஆண்டு  மூடப்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர்.

இந்நிலையில்,  கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் சார்பில் ரூ.1600 வரி பாக்கி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆலை மீண்டும் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 20015ம் ஆண்டு  தமிழக அரசோடு நோக்கிய நிறுவனம்  செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, நோக்கியா தொழிற்சாலை சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்து செயல்பட்டு வந்தது.

இந்நிலையில்,  கடந்த 2012ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து  , 2014ம் ஆண்டு நவம்பரில் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. அங்கு வேலை செய்துவந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பெரும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து மத்திய மாநில அரசுகள் சார்பாக பின்லாந்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது  வரி ஏய்ப்பில் தள்ளுபடிகள் பெற்று பிரச்சனையை சுமுகமாக முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதனபடி சுமூக உடன்பாடு  எட்டப்பட்டு 1600 கோடி ரூபாய் வரி பாக்கியை நோக்கிய நிறுவனம் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக நோக்கியா  நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்ப பெற முன் வந்துள்ளது.

இதன் காரணமாக தொழிற்சாலை மீண்டும் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.