தீபிகா படுகோனே – பாலிவுட் நடிகை

நியூயார்க்:

உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலை அமெரிக்காவின் டைம் இதழ்  வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகை தீபிகா படுகோனே, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஓலா நிறுவன இணை நிறுவனர் பவிஷ் அகர்வால், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால், இந்த ஆண்டு வெளியாகி உள்ள பட்டியில்  இந்திய பிரதமர் மோடி பெயர் இடம்பெறவில்லை.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும்  உலக அளவில் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு நடத்தி, செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

விரோட் கோலி – கிரிக்கெட்

அதன்படி இந்த ஆண்டு வெளியிட்டுள்ள செல்வாக்கு பெற்ற  100 பேர் பட்டியலில்  இந்தியாவைச் சேர்ந்த  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஓலா நிறுவன இணை நிறுவனர் பவிஷ் அகர்வால், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

சத்யா நாதெள்ளா – மைக்ரோசாப்ட்

ஆனால் உலக அளவில் பிரபலமாக பேசப்படும் தலைவர்களான  அமெரிக்க அதிபல்ர டொலால்டு டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரிய தலைவர் கிம் ஜோங் ஐன், பிரின்ஸ் முகம்மது பின் சல்மான், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, இந்திய பிரதமர்ல  நரேந்திர மோடி  போன்றோரின் பெயர்கள் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பவிஷ் அகர்வால் – ஓலா

2017ம் ஆண்டுக்கான, 100 செல்வாக்கு உள்ளோர் பட்டியலில்  இந்தியாவில் இருந்து, பிரதமர் மோடி மற்றும், மின்னணு முறையில் பணம் செலுத்தும் ‘மொபைல் ஆப்’பான’ பேடிஎம்’ நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மகளும், ஆலோசகருமான இவான்கா டிரம்ப், அவருடைய கணவர் ஜாரெட் குஷ்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய தலைவர் கிம் ஜாங்க் உன் உள்ளிட்டோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.