பியோங்யங்:
ஒலிம்பிக் போட்டிகளில் தென் கொரியா பங்கேற்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார்.
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பச் சந்தித்து பேசினார். இதன் பின்னர் பச் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ வடகொரியா அதிபருடன் 30 நிமிடங்கள் பேசினேன். தொடர்ந்து 45 நிமிடங்கள் விவாதங்கள் நடந்தது. இந்த சந்திப்பு பியோங்யங் மே தின விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்த கால்பந்து போட்டியின் போது நடந்தது.
ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவுக்கு குழு மேற்கொண்டு வரும் உதவிகளை அவர் பாராட்டினார். ஒலிம்பிக் போட்டி அணிவகுப்பில் தென்கொரியாவுடன், வட கொரியா வீரர்களும் இணைந்து கலந்து கொள்வார்கள் என்று அவர் உறுதியளித்தார்.
2020ல் டோக்கியோவில் நடக்கும் கோடைகால ஒலிம்பிக் மற்றும் 2022ல் பெய்ஜிங்கில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா பங்கேற்கும் என்று தெரிவித்தார். இதற்கான அவருக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது’’ என்றார். தொடர்ந்து வடகொரியா விளையாட்டு துறை அமைச்சர் சந்தித்து பேசினார்.