டில்லி:
அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும், அசாம் பெண்கள் பல்கலைக்கழகத்தை மத்திய அரசு மூட முயற்சி செய்வதாக, அசாம் மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நாட்ளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஆந்திர எம்.பி.க்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக எம்.பி.க்கள் போராடி வரும் நிலையில, அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், அசாம் பெண்கள் பல்கலைக்கழகத்தை மத்திய அரசு மூட முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
வட மாநிலங்களில் உள்ள ஒரே பெண்கள் பல்கலைக்கழகமான அசாம் பெண்கள் பல்கலைக்கழகத்தை மூடக் கூடாது என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.