புதுச்சேரி:

ற்போது புதுச்சேரி கவர்னராக இருந்து வரும், கிரண்பேடி ஆந்திர மாநில கவர்னராக மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அந்த தகவல் உண்மை யில்லை என்றும், அது வெறும் வதந்தி என்றும் கூறினார்.

புதுச்சேரி மாநில ஆளுநராக உள்ள கிரண்பேடி, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார். அரசின் திட்டங்களுக்கு எதிராக காய் நகர்த்தியும், அரசு அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டுக்கள் வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

அவரது நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் ஆந்திராவுக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், ஆந்திராவுக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்று, பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் வெளியேறி, போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், தெலுங்கு தேச ஆட்சிக்கு செக் வைக்கும் வகையில் கிரண்பேடியை ஆந்திராவுக்கு மாற்ற மத்திய பாஜக அரசு நினைப்பதாக தகவல் வெளியானது.

தற்போது,  ஆந்திர மாநில ஆளுநராக உள்ள நரசிம்மனை மாற்றக்கோரி, முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு ஏற்கனவே  அழுத்தம் கொடுத்துள்ள நிலையில், கிரண்பேடி மாற்றப்படுவார் என்றும், நாடாளுமன்ற கூட்டத்தொடர்ந்து முடிவடைந்ததும், அதற்கான ஆணை வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில்,  இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இது உண்மை யில்லை என்றும், “இதுபோன்ற வதந்தி தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது” என்றும் கூறினார்.