போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் – கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்

சென்னை:

ரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து, பேருந்து நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்ற இரவு வண்டலூரில் இருந்து பிராட்வேக்கு வந்த அரசு பேருந்தில் 2 வழக்கறிஞர்கள் ஏறினர். அவர்களிடம் பேருந்து நடத்துனர் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, டிக்கெட் எடுக்க மறுத்த வழக்கறிஞர்கள் பேருந்து நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதன் காரண மாக ஏற்பட்ட தகராறில் பேருந்தின் ஓட்டுநர் ஜாகிர் மற்றும் நடத்துநர் துளசி காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து கழக ஊழியர்கள், தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி   சென்னை பாரிமுனையில் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக இரவு நேர பேருந்தில் செல்ல காத்திருந்த பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூக்கடை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர. அதைத்தொடர்ந்து,  போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில், பேருந்து நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள்  தமிழ்வாணன், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.