டில்லி:
பான் (நிரந்தர கணக்கு என்) கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய வருவாய்த் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் பல்வேறு திட்டங்களுடன் ஆதார் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி 31.-7-.2017, 31.-8-.2017, 31-.12-.2017 என 3 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. இறுதியாக 31.-3.-2018 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டது. 5.-3.-2018ம் தேதி நிலவரப்படி வருமான வரித்துறையில் நிரந்தர கணக்கு வைத்துள்ள சுமார் 33 கோடி பேரில் 16.65 கோடி பேர் பான் எண்ணை ஆதாருடன் இணைத்துள்ளனர்.
இதைதொடர்ந்து ஆதார் எண்ணுடன் பான் இணைக்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.