சென்னை:

நீதித்துறை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படவேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டசென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது,

பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி நீதிமன்றங்களை நாடுகின்றனர் என்று தெரிவித்த அவர்,  நீதித்துறை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படவேண்டும் என கூறினார். மேலும்   நீதிபதிகள் வழங்கக்கூடிய தீர்ப்பு, பொதுமக்கள்  பேசும் அளவிற்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.