திருப்பதி:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்தநாளுக்கு திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசித்தார். அப்போது, ரூ.26 லட்சம் பணத்தை கோவிலின் அன்னதான திட்டத்துக்காக நன்கொடை அளித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து வரும் தெலுங்குதேச கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் பாஜகவுட னான உறவை முறித்துள்ள நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது குடும்பம் சகிதமாக திருமலை திருப்பதி வந்தார்.
தனது பேரன் தவனேஷின் பிறந்தநாளை யொட்டி குடும்பத்துடன் கோவிலுக்கு வந்ததாக தெரிவித்த அவர், திருப்பதி வெங்கேஸ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தனது பேரனை கையை பிடித்துக்கொண்டு சென்ற அவர்,, தனது பேரன் தேவன்ஷ் உடன் அங்குள்ள கொடி மரத்தையும் கும்பிட்டார்.
அதைத்தொடர்ந்து கோவிலில் செயல்படுத்தி வரும் இலவச அன்னதான திட்டத்துக்கு தனது பேரன் சார்பாக ரூ.26 லட்சம் காணிக்கை செலுத்தினார்.