மாதிரிப் படம்

பிலிபத், உத்திரப் பிரதேசம்

.பி அரசு ஆயுர்வேத மருந்தகம் கோமியத்தை சேகரித்து சுத்திகரித்து பாட்டில்களில் அடைத்து சத்துப் பானமாக விற்பனை செய்ய உள்ளது.

கோமியம் (பசுவின் சிறுநீர்) உட்பட பல பொருட்களில் உள்ள மருந்துத் தன்மையை ஆராய கடந்த 2017ஆம் வருடம் ஜூலை மாதம் அரசால் 19 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.   அதில் மூவர் ஆர் எஸ் எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சார்ந்தவர்கள் ஆவார்கள்.    இந்தக் குழு கோமியம் கலந்து உருவாக்கப்படும் பஞ்சகவ்யம் போன்ற பொருட்களை ஆயுர்வேத மருந்துகளாக உபயோகிக்கவும்,  மற்றும் கோமியத்தைக் கொண்டு உருவாக்கக் கூடிய மற்ற பொருட்களை பற்றியும் அரசு ஆயுர்வேத மருந்தகத்துக்கு பரிந்துரை செய்தது.

அதையொட்டி இந்த மருந்தகத்தின் தலைவர் நரேஷ் சந்திர கங்க்வார், “சுத்திகரிக்கப்பட்ட கோமியத்தை பாட்டில்களில் அடைத்து சத்துப் பானமாக விற்க உ. பி. அரசு உத்தேசித்துள்ளது.   இது குறித்து நாங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தி நிலையங்களிலும் பசு பாதுகாப்பு இல்லங்களிலும் தொடர்பு கொண்டு கோமியம் சேகரிக்க திட்டமிட்டுள்ளோம்.    விரைவில் இது குறித்து விரிவான அறிவிப்பு வழங்கப்படும்.

அது தவிர கோமியத்தைக் கொண்டு பல மருந்துகள் தயாரிக்கும் திட்டமும் உள்ளது.  இந்த மருந்துகள் மூலம், ஜுரம், காமாலை, மூலம்,  வயிறு மற்றும் கல்லீரல் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்த முடியும்.    ஆய்வுகளின் மூலம் கோமியம் என்பது ஆயுர்வேத மருந்துகளின் ஒரு பகுதி எனவும் அதைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதும் கண்டறியப்பட்டுளது.

இதைத் தொடர்ந்து மேலும் பல மருந்துகள் கோமியத்தைக் கொண்டு உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.   இந்த மருந்துகள் மூலம் புற்று நோய், சரும பிரச்னைகள் ஆகியவைகளை குணப்படுத்த முடியும்.   ஆயுர்வேத மருந்துகளுக்கு பக்க விளைவுகள் இல்லை என்பதால் நாடெங்கும் இந்த மருந்துகளின் தேவை அதிகரிக்கும்”  எனத் தெரிவித்துள்ளார்.