காபூல்:

ப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று பாரசிக புத்தாண்டு தினம் ஆப்கானிஸ்தானில் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இந்த குண்டு வெடிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மதியம், காரில் வந்த தற்கொலைபடையை சேர்ந்த பயங்கரவாதி  காபூலில் உள்ள அபாத் மருத்துவமனை அருகே உள்ள காபூல் பல்லைகக்கழக வாசல் பகுதியில் வெகுண்டை இயக்கி  வெடிக்க செய்ததாகவும்ம் இந்த வெடி விபத்தில் 26 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.‘

மேலும் காயமடைந்த 18 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பலரின் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் அருகே உள்ள கோவிலுக்கு சென்று வருபவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அந்தப்பகுதி உடனடியாக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில்  மருத்துவமனையும் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாரசீக புத்தாண்டு நாவ்ரோஸின் முதல் நாளில் இந்த வெடிப்பு குண்டு வெடிப்பு நடந்துள்ள பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வசந்த காலத்தின் தொடக்கத்தில் பண்டைய பாரசீக  புத்தாண்டு ஆப்கானிஸ்தானில் கொண்டாடப்படுகிறது,  இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஆனால் இந்த கொடூர தாக்குதலை தலிபான்கள்தான் நடத்தியிருப்பார்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர்.