டில்லி

ன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகம் ரசிகர்கள் (ஃபாலோயர்) கொண்டவர்களுக்கான விருதுகள் இந்தியாவில் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பல பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர்.   அவரை பின் தொடர்வோர் என கூறப்படும் ரசிகர்கள் எண்ணிக்கையை பொறுத்தும்,   அவர்களின் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தும் கணக்கை பொறுத்தும் இன்ஸ்டாகிராம் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.     இவ்வகையில் இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு முதல் முறையாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிகம் பின் தொடர்வோர்களைக் கொண்டவர் என்னும் விருது பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.   தீபிகாவை 2 கோடியே 24 லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்ன்கின்றன.   அடுத்த படியாக பிரியங்க சோப்ரா (2.20 லட்சம்) உள்ளார்.   அவரைத் தொடர்ந்து 2 கோடி ரசிகர்களைக் கொண்ட ஆலியா பட் மற்றும் ஷ்ரத்தா கபூருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மிகவும் பிரபலமானவர் என்னும் முறையில் விருது வழங்கப்பட்டுள்ளது.  அவருக்கு 1 கோடி 98 லட்சம் ரசிகர்கள் மட்டுமே உள்ளனர்.   எனினும் அவருக்கு வரும் லைக்குகளும் கமெண்டுகளும் மற்ற பிரபலங்கலை விட அதிகம் என்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.