டில்லி:

டில்லியில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘கொலை வழக்கு குற்றவாளி ஒருவரை கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியில் நடக்காத காரியம். காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே தடுப்புச் சுவர் இருக்கிறது. எனினும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்போடு ஒருவர் திடீரென பாராசூட்டில் வந்து குதிக்கும் அதிசயம் இங்கு கிடையாது.

குஜராத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டபோது அதன் முடிவுகள் நல்ல முறையில் இருந்தது. மோடி நீர் விமானத்தில் பறந்ததை தான் பார்க்க முடிந்தது. காங்கிரஸ் தொண்டர்களுக்கு எதிர்காலத்தில் உண்மையான அதிகாரம் வழங்கப்பட்டால் மோடி கடலுக்கு அடியில் தான் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக.வினர் மகாபாரதத்தில் வரும் கவுரவர்களை போன்றவர்கள். ஆனால் காங்கிரஸ் பாண்டவர்களை போன்றது. பாஜக பதவிக்காக சண்டையிடும் போது காங்கிரஸ் உண்மைக்காக சண்டையிடும். பாஜக.வில் குரல் ஒரு அமைப்பின் குரலாக தான் இருக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் குரல் இந்த தேசத்தில் குரலாக இருக்கும்.

நாட்டில் வேலையில்லா திண்டாடட்டம், விவசாயிகள் தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆனால், மக்களின் கவனத்தை இதிலிருந்து திசை திருப்பும் வகையில் இந்தியா கேட் முன்பு யோகாவில் ஈடுபடுவோம் என்று கூறுகிறார் மோடி’’ என்றார்.

தொடர்ந்து ராகுல் பேசுகையில், ‘‘பாஜக.வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் சிறுபான்மை இளைஞர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது. இஸ்லாமியர்கள் இந்த நாட்டிற்கு சொந்தமானவர்கள் கிடையாது என்று கூறும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் என்ற அழகான மொழியை மாற்றுமாறு வலியுறுத்தப்படுகிறது. வடகிழக்கு மக்களின் உணவு எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

கவுரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகியோர் வாய் மூடி இருக்க வேண்டும். இல்லை என்றால் கொல்லப்படுவார்கள். பெண்கள் சரியான உடை அணியவில்லை என்றால் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் நீதி வேண்டி பொதுமக்களை தேடி வந்துள்ளனர். இதற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம். அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் என்ற ஒரு அமைப்பு தான் இருக்க வேண்டும்’’ என்றார்.