ராஞ்சி
சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு உண்டானதால் அவர் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 69) மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. கால்நடை தீவனத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக எழுந்த அந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நேற்று திடீர் என உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். தற்போது லாலு பிரசாத் யாதவுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக மருத்துவமனை அதிகாரிகல் தெரிவித்துள்ளனர்.