டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு, தற்போது டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 28ந்தேதி சென்னை ஏர்போர்ட்டில், சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை  போலீஸ் காவலில் எடுக்க சிபிஐ தாக்கல் செய்த மனுவின்மீது,  போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.

இதற்கிடையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் அளிக்க வேண்டும் என டில்லி உயர்நீதி மன்றத்தில் கார்த்தி சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரம் விசாணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்போது கார்த்தி சிதம்பரத்தின் 12 நாள் போலீஸ் காவல் முடிந்து, தற்போது திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமின் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் டில்லி உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது.

வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைப்பதாக கூறி உள்ளார்.