கோரக்பூர், உ. பி

த்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் நடந்த இடை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பணியில் மரணம் அடைந்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் இடை தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  அங்கு உள்ள புல்பூரில் 19.49 லட்சம் வாக்களர்களில் 9.34 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.   அதே போல் பல தொகுதிகளிலும் குறைவான அளவிலே வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடை பெற்றது.   அதில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒதுக்கப்பட்ட அரசு அதிகாரிகளில் ஒருவர் மரணம் அடைந்தவர் ஆவார்.    இது போல் நடப்பது முதல் முறை அல்ல எனவும் ஏற்கனவே வாக்குப் பதிவு நேரத்திலும் தேர்தல் வேலை அளிக்கப்பட்டவர்களில் இருவர் மரணம் அடைந்தவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட அதிகாரிகள் கவனிக்காமல் செய்த தவறு என காரணம் கூறி உள்ளனர்.

[youtube-feed feed=1]