ஸ்ரீநகர்:

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று, மறைந்த முப்தி சயீது குடும்பத்தில் ஏற்பட்ட வெளியேற்றத்தை தொடர்ந்து பாஜக.வுடன் கூட்டணி அமைக்க ஹசிப் திரபுவுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. கூட்டணி அமைந்து 3 ஆண்டுகள் கழித்து தற்போது நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஹசீப் திரபு நீக்கப்பட்டுள்ளார்.

‘‘காஷ்மீர் மாநிலத்தில் நிலவுவது அரசியல் பிரச்னை இல்லை’’ என்று ஹசீப் திரபு கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் புயலை கிளப்பியது. பிரிவினைவாதிகள் உள்பட பல தரப்பில் இருந்து இந்த கருத்தை விமர்சனம் செய்தனர்.

காஷ்மீர் பிரச்னையில் மக்கள் ஜனநாயக கட்சி தனது நிலைப்பாடை தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது. எனினும் காஷ்மீரில் நிலவுவது அரசியல் பிரச்னை தான் பிடிபி தனது நிலைப்பாட்டை தெளிவுப டுத்தியது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம தீர்வு காணப்படும் என்று தெரிவித்தது. எனினும் ஹசீப் திரபுவை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கான கடிதத்தை கவர்னருக்கு முதல்வர் மெஹபூபா முக்தி அனுப்பினார்.

பிடிபி-பாஜக கூட்டணி அமைய முக்கிய பங்காற்றியவர் ஹசீப் திரபு என்பது குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட ஒப்பந்ததில் இரு கட்சியினரும் கையெழுத்திட்ட பின்னர் தான் பிடிபி ஆட்சி அமைத்தது. பாஜக&பிடிபி கூட்டணி ஏற்பட்டதற்கு எதிர்கட்சிகளால் அதிக விமர்சனம் செய்யப்பட்டவர் ஹசீப் திரபு.

3 ஆண்டுகளில் 2 முறை கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை இவர் தான் சரி செய்தார். இதனால் தான் அவர் நிதியமைச்சராக வளர முடிந்தது. பிடிபி கட்சியின் உள்ளேயே ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தான் அவரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் முன்வந்தார். இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் பிடிபி கட்சியில் இருந்தும் நீக்கப்படவுள்ளார். அவர் புல்வாமாவின் ராஜ்போரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவரது நீக்கம் காரணமாக 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக-பிடிபி கூட்டணி அமைவது கேள்விகுறியாகியுள்ளது. அதேபோல் 2020ம் ஆண்டில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கும் இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

‘‘சர்ச்சையான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்று கட்சியினர் அனைவருக்கும் வலியுறுத்துவதற்காக தான் முதல்வர் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார்’’ என்று அம்மாநில கல்வி துறை அமமச்சர் அல்தாப் புகாரி தெரிவித்துள்ளார்.