மாஸ்கோ

ந்த வருடம் நடைபெற உள்ள ரஷ்ய தேர்தலில் வாக்காளர்களை வாக்களிக்க வைக்க ரஷ்யா போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவில் இந்த வருடம் நடைபெற உள்ள தேர்தலில் தற்போதைய அதிபரான விளாடிமிர் புதினுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமான நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.   இது மக்கள் மனதிலும் எதிரொலிப்பதாக சொல்லப் படுகிறது.   அதனால் பலர் வாக்களிக்க வராமல் இருக்கலாம் என்னும் சந்தேகம் அரசுக்கு எழுந்துள்ளது.   எனவே வாக்காளர்களை ஊக்குவிக்க  ரஷ்யா திட்டம் தீட்டி உள்ளது.

இது குறித்து ரஷ்ய அரசு பல போட்டிகளை நடத்த உள்ளது.    அத்துடன் லாட்டரி முறையில் வாக்களிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசளிக்கவும் திட்டமிட்டுள்ளது.   மேலும் அதிர்ஷ்ட குலுக்கல் பரிசும் அளிக்க உள்ளது.   மேலும் எப்போதும் போல் இந்த முறையும் வாக்களிப்பை ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்துவதன் மூலம் பலர் வாக்களிக்க வருவார்கள் என அரசு எண்ணி உள்ளது.

தனது வெற்றி உறுதி என்பதினாலோ என்னவோ புதின் பரப்புரையில் அதிகம் கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.