டூப்லின்:

யர்லாந்தை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவருக்கு, முளை இருக்க வேண்டிய இடத்தில், வெறும் வெற்றிடம் இருந்ததாக அந்நாட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

முழு மூளையும் இல்லை.. அதாவது.. இடப்பக்க மூளையில் பெரும்பாலான பகுதி இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த முதியவருக்கு கடந்த சில மாதங்களா தலைவலி ஏற்பட்டு இருக்கிறது. மேலும், உடல்சோர்வு, பசியின்மை, மறதி,  மயக்கம் என்று பிரச்சினைகள்.  இதனால் அந்த முதியவர் காஸ்வே என்ற பிரபல மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு இவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சொல்லி இருக்கிறார்கள். அப்போதுதான் இவருக்கு மூளையில் பாதி பகுதியே இல்லை என்பது தெரியவந்தது. அந்த இடம் வெற்றிடமாக இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அவரை வைத்து தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இவருக்கு பாதி மூளைதான் இருக்கிறது என்பது கடந்த பிப்ரவரி மாத இறுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவரை வைத்து ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியாகிவிட்டன.

மூளையில் பாதிப்பகுதி இல்லை என்றாலும் இதுவரை எந்தப் பிரச்சினையும் இன்றி இயல்பாக வாழ்ந்திருக்கிறார் அந்த முதியவர். சமீபகாலமாகத்தான் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.