ஜூனிஜுனு, ராஜஸ்தான்

பிரதமர் வருகையின் போது கருப்புக் கொடி காட்டியதற்காக 8 கட்டிட தொழிலாளர்களை ராஜஸ்தான் மாநில காவல் துறை கைது செய்துள்ளது.

தற்போது ராஜஸ்தானில் தேசிய சுகாதார மையத் துறையில் பலர் நிர்வாகத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர்.  அவர்களுக்கு பணி நியமனம் கோரி பலமுறை அவர்கள் துறை அமைச்சருக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேவுக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.  அவர்களை சந்திக்க முதல்வர் நேரம் ஒதுகவில்லை.  அதனால் அந்த பணியாளர்கள் அரசின் மீது வருத்தத்தில் உள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ளது ஜூனிஜுனு என்னும் ஊர்.   இந்த ஊரில் தேசிய ஊட்டச்சத்து மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த மையத்தை தொடங்கி வைக்கவும், நாட்டில் நடைபெற்று வரும் பெண் குழந்தையை காப்போம் பரப்புரையில் கலந்துக் கொள்ளவும் பிரதமர்  மோடி  ராஜஸ்தான் வந்துள்ளார்.   தங்கள் எதிர்ப்பை காட்ட அவர் ஊர்வலம் வந்த போது தங்களின் எதிர்ப்பை அமைதியான முறையில் காட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கருப்புக் கொடியை காட்டி உள்ளனர்.

அதை ஒட்டி ராஜஸ்தான் மாநில காவல்துறை அவர்களின் தலைவர்களான 8 பேரை கைது செய்துள்ளது.  அவர்கள் மீது கலவரம் ஏற்படுத்துதல்,  அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு அளித்தல், மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்நிகழ்வுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.