பாட்னா:

பீகாரில் ஆராரியா லோக்சபா தொகுதி மற்றும் ஜெகானாபாத், பபுவா ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்தது..

ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே பலத்த போட்டி நிலவியது.

பகல் 12 மணிக்கு ஆராரியா தொகுதியில் 31.25 சதவீத வாக்குகளும், ஜெகனாபாத்தில் 28.6 சதவீதமும், பபுவாவில் 24.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆராரியா தொகுதியில் 57 சதவீத வாக்குகள் பதிவானது.

ஜெஹானாபாத் தொகுதியில் 50.56 சதவீதம் வாக்குகளும், பபுவா தொகுதியில் 54.3 சதவீதமும் வாக்குகளும் பதிவாகின. மூன்று தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக 55.77 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மார்ச் 14ம் தேதி நடக்கிறது’’ என்றார்