இஸ்தான்புல்:

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு  தலா  ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. .

துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக  குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கில் இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

செய்தியாளர்களை விடவிக்கக்கோரி நடந்த போராட்டங்களில் ஒன்று ( கோப்பு படம்)

பத்திரிகையாளர்கள் 23 பேர் ஆயுதமேந்திய பயங்கரவாதக் குழு உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். மேலும் இரண்டு பேர்  சில குற்றச்சாட்டுக்களில் தொடர்பு இருப்பதாக டோக்கன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் அமெரிக்காவைச் சார்ந்த போதகர் பெத்தூலா குலென், குழுவுக்கு  நெருக்கமான ஊடகங்களில் பணியாற்றுபவர்கள்.

இந்த செய்தியாளர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற்று விடுதலை செய்ய வேண்டும் என்று பல போராட்டங்கள்  நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.