காபூல்:

ப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் ராணுவ புறக்காவல் நிலையம் மீது தலீபான் பயங்கரவாதிகள்  தாக்குதலில் ஈடுபட்டனர்.  இத்தாக்குதலில்  காவல்துறையினர் பத்து பேர் பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதல் குறித்து மாகாண செய்தித்தொடர்பாளர் காலீ அசெய்ர் தெரிவித்ததாவது:

“மாகாணத்திலுள்ள புறக்காவல் நிலையத்தின் மீது தலீபான் பயங்கரவாதிகள் பெரும் எண்ணிக்கையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தாக்குதலில் ஆப்கான் ராணுவத்தினருக்கு உதவியாக குவாஜா கார் மாவட்டத்தின் உள்ளூர்  காவல்துறையினர் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஆனாலும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 உள்ளூர் காவல்துறையினர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் ராணுவத்தினர் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதனிடையே தலீபான் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா முஜஹித், வடக்கு தாகர் மாகாணத்தில் நடத்தப்பட்ட  தாக்குதலுக்கும் போலீசார் படுகொலைக்கும் தலீபான் பொறுப்பேற்றுள்ளதாக கூறினார் என போலீசார் தரப்பில் தகவல்கள் வெளிவந்துள்ளது.