பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடி வடிவமைக்க 9 பேர் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையான கடந்த ஆண்டு அமைத்தார். இக்குழு கடந்த பிப்ரவரி 5ம் தேதி கொடி வடிவமைப்பு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என 3 நிறங்களுடனும், மத்தியில் வெள்ளை நிறத்துவடன் மாநில அரசின் சின்னம் அதில் இடம்பெற்றிருக்கும். இதற்கு அனைத்து தரப்பிலும் ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சித்தராமையா இந்த கொடியை வெளியிட்டார்.

இது குறித்து சித்தராமையா கூறுகையில், ‘‘இந்த கொடியை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். மாநிலத்திற்கு என்று தனி கொடி வைத்திருப்பதற்கு எதிராக அரசியலமைப்பு சட்டம் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் ஒப்புதல் அளித்திடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.