கஸ்தூரி

 

மிரட்டல் விடுப்போரை ஓடச்செய்வேன் என்று நடிகை கஸ்தூரி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள்  குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவரது ட்விட்டுகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வேலாம்புதூரில் கணவனை இழந்த ஆராயி அவரது மகள் பலாத்காரம் செய்யப்பட்டது, மற்றும் அவரின் மகன் கொலை செய்யப்பட்டது குறித்து கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில் வன்னியர் என்ற வார்த்தை இருந்தது. இதற்கு அச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் கஸ்தூரி, இதற்கு வருத்தம் தெரிவித்தார்.

வருத்தம் தெரிவித்த ட்விட்

“பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள். வேலாம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் ‘அன்னியக்கும்பல்”, Anniyar, என்பதற்கு பதில் “Vanniyar” என்று எழுத்துப்பிழை காரணத்தால், அந்த கீச்சை நீக்குகிறேன். அந்த கீச்சை யாரும் SS எடுத்து தொடர்ந்து பகிரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர் சாதி பிரிவினையைத் தூண்டுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று கஸ்தூரி ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“மிரட்டல் விடுத்தாலும் சிறையில் அடைத்தாலும் நேர்பட பேசுதல் நிறுத்த மாட்டேன் துச்சம்மென நினைத்தெம்மை அச்சுறுத்தல் செய்வோரை போர் புரிந்தோட்டவும் தயங்கமாட்டேன்…”  என்று கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.