
அகர்தலா
திரிபுராவின் முன்னாள் முதல்வர் மானிக் சர்காரிடம் தற்போதைய பாஜக முதல்வர் பிப்லாப் ஆசி பெற்றுள்ளார்.
திரிபுராவில் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. முன்னாள் முதல்வரான மானிக் சர்கார் எளிமையான முதல்வர் என பல தரப்பினரும் புகழ்ந்து வந்துள்ளனர். அவருடைய எளிமை மற்றும் நேர்மை கட்சிப்பாகுபாடின்றி அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் ஆகும்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. தற்போதைய முதல்வராக திரிபுரா மாநில பாஜக தலைவர் பிப்லாப் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் மானிக் சர்க்காரை சந்தித்த பிப்லாப் அவரை வணங்கி அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.
இந்த செய்தி வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது
Patrikai.com official YouTube Channel