ஆம்புலன்ஸின் அலட்சியத்தால் இரண்டு பெண்கள்,  சாலையில் குழந்தை பெற்ற சம்பவம் உத்ரகண்ட் மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ளது, பொகாரி என்ற சிறு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா தேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்குப் பிரசவ வலி ஏற்படவே,  அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு  அலைபேசினர்.

ஆனால் போனை எவரும் எடுக்கவில்லை. இதையடுத்து மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே, ரேகாதேவியை அழைத்துக்கொண்டு, மாவட்ட மருத்துமனைக்கு வந்தனர். அங்கு மருத்துவர்  இல்லை.   தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரேகாதேவியின் உறவினர்கள் மீண்டும் 108-க்கு அலைபேசினர். இப்போதும் யாரும் போனை எடுக்கவில்லை.

வேறு வழியின்று வேறு வாகனத்தை வாடகைக்கு எடுத்து 75 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். வழியிலேயே ரேகாதேவிக்கு  பிரசவ வலி அதிகரித்தது. சாலையோரம் வண்டியை நிறுத்தப்பட்டது. அங்கேயே  குழந்தை பிறந்துவிட்டது.

108 ஆம்புலன்ஸ் அலட்சியத்தால் சாலையிலேயே  பெண் பிரசவித்த சம்பவம் உத்ரகாண்டில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.