திருவனந்தபுரம்:
‘‘வலுவான இடதுசாரி அமைப்பு நாட்டிற்கு அவசியம். இடதுசாரிகள் நிராகரிக்கப்படுவது நாட்டிற்கு பேரழிவு என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபரத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், ‘‘கேரளாவில் இடதுசாரிகளை எதிர்த்து நாங்கள் சண்டையிட போகிறோம். நாங்கள் அரசியல் எதிரிகள். ஆனால், இடதுசாரிகளை இந்தியா நிராகரிக்க கூடாது. இடது சாரிகளும் மக்களின் எதிர்பார்ப்புகளை கற்க வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் தலைவரும், கேரளா நிதி அமைச்சருமான தாமஸ் ஐசக் கலந்துகொண்டார். அவர் முன்னிலையிலேயே ஜெய்ராம் ரமேஷ் இத்தகைய கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ‘‘பருவ நிலை மாற்ற எச்சரிக்கை காரணமாக இயற்கை சார்ந்த தொழில்நுட்பங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. பருவ நிலை மாற்றம் என்பது தத்துவம் கிடையாது. அது தற்போது உண்மையாகியுள்ளது. இயற்கைக்கும், மனித இனத்திற்கும் பருவ நிலை மாற்றம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.