டில்லி:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் சார்பில் சில புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டது. இதில்,‘‘ இந்தியாவில் தற்போது வேலையில்லாதவர்களின் எண்ணக்கை 3.10 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவி க்கப்பட்டுள்ளது.
கடந்த 16 மாதங்களில் 2018 பிப்ரவரி மாதம் தான் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகளவில் இரு ந்துள்ளது. அதே சமயம் கடந்த ஜூலை மாதத்தில் தான் வேலையற்றோர் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. அதன் பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது’’ என்று அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.
இது குறித்து அந்த மைய சிஇஓ மகேஷ் வியாஸ் கூறுகையில், ‘‘கடந்த 3 வாரங்களாக வேலையற்றோர் எண்ணிக்கை 7 சதவீதத்தை எட்டியுள்ளது. எனினும் பணமதிப்பிழப்புக்கு முன்பிருந்த பழைய எண்ணி க்கைக்கு இதை கொண்டு செல்ல வாய்ப்புகள் உள்ளது’’ என்றார்.
பணமதிப்பிழப்பு அறிவிப்பு வேலைவாய்ப்பில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தான் வேலைவாய்ப்புகள் குறைந்தது. வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை பணமதிப்பிழப்புக்கு முன்பு 46 முதல் 48 சதவீதம் வரை இருந்தது. 2017 ஜூலை மாதத்தில் இது 43 சதவீதமாக குறைந்தது.
‘‘பணமதிப்பிழப்பு காலம் முடிந்த பின்னரும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தொழிலாளர்கள் மீண்டு வரவில்லை. ரிசர்வ் வங்கி பண புழக்கத்தை அதிகரித்தும் இந்த நிலைமை திரும்பவில்லை. எனினும் மக்கள் தற்போது பணியாற்ற மெதுவாக திரும்பிக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தவில்லை’’ என்று குவார்ட்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. தற்போதுள்ள 3.10 கோடி வேலையற்றவர்களோடு, வரும் மே மாதம் கல்லூரியில் இருந்து வெளியேறும் நகர்புற இளைஞர்களும் இதில் இணையவுள்ளனர்.
ஆனால், 2018 நிதியாண்டில் 6 லட்சம் பணிகள் மட்டுமே புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப் புற இந்தியாவில் ராபி பருவ அறுவடைக்கு பின்னர் செயல்பாடுகள் மந்தமாகும். காரிஃப் பரும் தொடங்கும் வரை மே மாதம் வரை வேலைவாய்ப்புகள் குறிப்பிட்ட அளவு தான் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.