சென்னை

தென்னிந்திய பின்னணி பேசுவோர் சங்க தலைவர் தேர்தலில் நடிகர் ராதா ரவி வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று தென்னிந்திய பின்னணி பேசுவார் சங்கத் தலைவர் தேர்தல் சென்னை பரணி  ஸ்டூடியோவில் நடை பெற்றது.

நடிகர் ராதா ரவி அணியும், கண்டசாலா ரத்னகுமார் தலைமையில் அமைந்துள்ள ராமராஜ்யம் என்னும் அணியும் தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு போட்டியிட்டன.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் ராதாரவி வெற்றி பெற்றுள்ளார்.