
மும்பை
சிவசேனா கட்சி தலைவரும் கேலி சித்திரம் வரைவதில் வல்லவருமான ராஜ் தாக்கரே நடிகர் கமலஹாசன் குறித்த தனது கேலிச் சித்திரத்தை வெளியிட்டுள்ளார்.

சிவசேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே கார்ட்டூன் எனப் படும்கேலிச் சித்திரங்கள் வரைவதில் மிகவும் வல்லவர். அவரது அரசியல் கேலிச் சித்திரங்கள் கட்சிப் பாகுபாடின்றி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. நடிகர் கமலஹாசன் பற்றி தற்போது அவர் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார்.
அந்த கேலிச் சித்திரத்தில் தமிழ்நாடு என்னும் பெயரில் ஒரு குளம் உள்ளது. அந்தக் குளத்தில் தமிழ் பெருமை (TAMIL PRIDE) என்னும் பெயரில் கமலஹாசன் ஒரு பெரிய தாமரை மலராக மலர்ந்துள்ளார். அதே குளத்தில் ஒரு ஓரத்தில் பாஜக என்னும் சிறிய தாமரை உள்ளது. கரை ஓரத்தில் மோடியும் அமித்ஷாவும் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். அமித்ஷா மோடியிடம், “ஐயா திடீரென்று இது எங்கிருந்து வந்துள்ளது?” எனக் கேட்கிறார்.
இந்த கேலிச் சித்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
[youtube-feed feed=1]