சென்னை

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயுதப் படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.    இந்த இடத்துக்கு வரவும்,  அஞ்சலி செலுத்தவும் மக்களும் பிரமுகர்களும் இன்னும் திரள் திரளாக வந்துக் கொண்டிருக்கிறார்கள்.   இங்கு எப்போதும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு காவலில் உள்ள ஆயுதப் படை காவலர்களில் ஒருவரான மதுரையை சேர்ந்த அருள் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடு பட்டுள்ளார்.   அவரை மற்ற காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   அங்கு அவர் மரணம் அடிந்துள்ளார்.

அவருடைய தற்கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.    ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படை காவலர் தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.   இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.