பானாஜி:

டந்த ஆண்டு நடைபெற்ற  கோவா சட்டசபை தேர்தலின் போது, தனத கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய  ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால்,  வாக்காளர்களே ஒட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கில் கோர்ட்டு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த நடைபெற்ற  கோவா சட்டமன்ற  தேர்தல் பிரச்சாரத்தின்போது,  சிம்பெல் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய, அப்போதைய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், ‘‘கட்சிகளின் ஊர்வலத்தில் பங்கேற்க பணம் வாங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஓட்டு போட பணம் கொடுத்தால், அதை வாங்கிக் கொண்டு தாமரைக்கு ஓட்டு போட வேண்டும்’’ என்று பேசினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து பேசிய கெஜ்ரிவாலும், ‘‘ பாஜகவினரிடம்  பணம் வாங்கிக் கொண்டு ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்’ என்று பேசினார்.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இருவர்மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதுகுறித்து விளக்கம் அளித்த கெஜ்ரிவால், ‘‘லஞ்சம் பெறுவதற்கு வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசவில்லை. பிற கட்சியிலிருந்து பணம் பெற்றுக் கொண்டாலும் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன்’’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில், கெஜ்ரிவாலின் பேச்சு குறித்த சிடி ஆதாரத்துடன் கோவா  மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது,  சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து விளக்கம் தரவில்லையெனில், உங்கள் மீது ஏன் எப்..ஐ.ஆர்.பதிவு செய்ய உத்தரவிடக்கூடாது என கெஜ்ரிவாலுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.  அதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தக்கட்டவிசாரணை 13ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.