ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 98.87 டன் கனிமங்கள் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மலைப்பகுதிகளில் கனிமங்கள் ஏராளமாக உள்ளன.   செம்பு, ஈயம், துத்தநாகம், பாஸ்பேட், தாது மணல்,  பளிங்கு, ஜிப்சம் போன்ற பல தாதுக்கள் இந்தப் பகுதியில் கிடைத்து வருகின்றன.    இந்த இடங்களில் சட்டவிரோதமாக இந்த தாதுக்கள் எடுத்துள்ளதாக கணக்குத் தணிக்கை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

“உச்ச நீதிமன்றம் கனிமங்கள் தோண்டி எடுப்பதற்கு பல விதிமுறைகள் அளித்துள்ளன.   ஆனால் ராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலைப்பகுதியில் அவைகள் மீறப்பட்டுள்ளன.    இந்த இடங்களில் உள்ள அரசின் கனிமச் சுரங்கங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு பின்பு அதே குத்தகை மீண்டும் புதுப்பிக்கப் பட்டுளன.  இதற்கு மாநில அரசின் கனிம வளத்துறையும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளன.

மேலும் குத்தகை எடுத்தவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்படாத இடங்களிலும் கனிமங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.   கடந்த 5 ஆண்டுகளில்மட்டும் 98.87 டன் கனிமங்கள் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளன.   இவை அனைத்தும்  ஆல்வார், ஜெய்ப்பூர், சிகார், ராஜ்சமந்த் மற்றும் உதயப்பூர் ஆகிய ஐந்து  மாநிலங்களில் நடைபெற்றவைகள் ஆகும்.   இந்த ஐந்து மாநிலங்களில் 2011-12 முதல் 216-17 வரை இது போல சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட 98.87 டன் கனிமங்களின் மதிப்பு சுமார் ரூ. 204.50 கோடி ஆகும்.   இதில் அரசு சுமார் ரூ.25.57 கோடி மதிப்பில் கனிமங்களை மீட்டுள்ளது.

இது போல சட்டவிரோதமாக கனிமச் சுரங்கள் அமைத்து கனிமங்களை எடுப்பதினால் அரசுக்கு இழப்பு மட்டுமின்றி சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.    இவ்வாறு சட்டவிரோதமாக கனிமச் சுரங்கம் அமைப்பவர்கள் எந்த ஒரு சட்ட திட்டத்தையும் பின்பற்றுவதில்லை.   இதனால் மலை வளம்,  வன வளம் மற்றும் நீர் வளமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது”  என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.