சென்னை: 

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.முத்துவின் மகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் தற்போது உடல்நலமில்லாமல் இருந்து வருகிறார்.  இவரது மகள் ஸ்ரீராணி.

இவர் தனது தந்தையான மு.க.முத்துவை கடந்த2009 முதல் பார்க்கவில்லை என்றும், இடையே ஒரு தடவை தான் பார்த்ததாகவும், ஆனால் என்னை சந்திக்க விடாமல் தனது சகோதரன் அறிவுநிதி அவரை அழைத்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எனது தந்தையை  அவர் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். அவரை பார்க்க எங்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே  எனது தந்தையை மீட்டுக் கொடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதிகள் செல்வம் மற்றும் சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க கோரி,  காவல்துறைஆணையர் மற்றும் மைலாப்பூர்  காவல்துறை இணை ஆணையர் மற்றும் கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.