டில்லி:

ப்ரல்   மாதம் 15-ம் தேதி நள்ளிரவு முதல் ஏர்செல் முழுமையாக மூடப்படுவதாக டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ள நிலையில், ஏர்செல் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் மற்ற நெட்வொர்க்குக்கு மாறும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவின் ஒரு பகுதியில் தனது சேவையை நிறுத்தி ஏர்செல், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாது என திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

அதைத்தொடர்ந்து,  இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஏர்செல் மூடப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மேலும், ஏர்செல் வாடிக்கையாளர்கள், தாங்கள் உபயோகப்படுத்தி வரும் அதே எண்ணையே மற்ற செல்போன் சேவையில் பெறும் வகையில், எப்படி மாற்றுவது என்பது குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது.

ஏர்செல் வாடிக்கையாளர்களே டிராய் அறிவுறுத்தி உள்ளபடி கீழே உள்ள தகவலை படித்து, அதில் உள்ள வழிகாட்டுதலின்படி  எளிய முறையில், உங்களுக்கு பிடித்த மொபைல் சேவையை பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்துக்கொள்கிறோம்.

 

ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது…!

தங்களது மொபைல் செட்டிங்கில், நெட்வொர்க் செட்டிங் சென்று அங்கு நீங்களாகவே (Manually) நெட்வொர்க் சர்ச் செய்ய வேண்டும். 

அதில் காண்பிக்கப்படும் நெட்வொர்க்கில் ஏர்டெல் 2-ஜியை தேர்வு செய்ய வேண்டும்.

பின்பு PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும். [PORT 1234567890 (send to 1900)]. 

இதன் மூலம் மொபைல் போர்ட்டபிளிட்டி எட்டு இலக்கு எண் உங்களுக்கு 24 மணி நேரத்தில் கிடைக்கும். 

இந்த எண்ணுடன் உங்களின் ஆதார் விவரங்களையும் சமர்ப்பித்து,  தாங்கள் விரும்பும் சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவன அலுவலகம் சென்று உங்களை சேவையை மாற்றிக்கொள்ளலாம்.

அந்த எண் மூலம் நீங்கள் வேறு நெட்வொர்க் மொபைல் சேவைக்கு மாறலாம்.

இந்த முறை மூலம் உங்களது பழைய மொபைல் எண் மாறாது. 

பின்னர் வழக்கம்போல உங்களது எண்ணை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம்.

பயன்படுத்திதான்  பாருங்களேன்….