சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் பிளஸ்2 பொதுத்தேர்வு நடைபெற்று, வருகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
இந்நிலையில் சிறைக்கைதிகள் 76 பேரும் பிளஸ்2 தேர்வை எழுதுகின்றனர்.
இன்று தொடங்கி உள்ள பிளஸ்2 தேர்வு அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு பிளஸ்2 பொதுத்தேர்வை, பல்வேறு வழக்குகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும் எழுதுகிறார்கள். இதற்காக சென்னையில் புழல் சிறையில் கைதிகள் தேர்வு எழுதும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மற்ற மாவட்ட சிறைகளில் உள்ள பிளஸ்2 தேர்வு எழுதும் கைதிகள் ஏற்கனவே புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று 76 சிறைக்கைதிகள் தேர்வு எழுதுவதாக கூறப்படுகிறது.
புழல் மத்திய சிறையில் 68 கைதிகள் தேர்வு எழுதுவதாகவும் அவர்களுடன் பாளையங்கோட்டை சிறை கைதிகள் 8 பேரும் சேர்ந்து மொத்தம் 76 கைதிகள் தேர்வு எழுதுகிறார்கள்.