சென்னை

ஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஊழல் புற்று நோய் போன்றது என தெரிவித்ததற்கு புற்று நோய் மருத்துவர் சாந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாபெரும் நகை வியாபாரி நிரவ் மோடியின் நிறுவனம்  பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11500 கோடிக்கு மேல் மோசடி செய்துளது.   சமீபத்தில் இருகுறித்து வங்கியில் நிர்வாக இயக்குனர் சுனில் மேத்தா, “இந்த மோசடியில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இந்த ஊழல் வங்கியில் ஒரு புற்று நோய் ஆகி விட்டது.   இதை சிறிது சிறிதாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி வருகிறோம்”  என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவருடைய இந்தப் பேச்சை கண்டித்து புரபல புற்று நோய் மருத்துவரான சாந்தா ஒரு கண்டனக் கடிதம் அனுப்பி உள்ளார்.  அதில், “உங்களுடைய வங்கி மோசடி குறித்த பேச்சு எனக்கு மிகவும் மனவருத்தம் அளிக்கிறது.   ஊழல் என்பது வெட்கக் கேடான ஒரு குற்றம்.   புற்று நோய் அப்படி ஒரு விஷயம் இல்லை.    ஆண்டு தோறும் எங்கள் மருத்துவ மனையில் ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து சிறப்பான வாழ்வை அடைகின்றனர்.   அது எங்களுக்கு பெருமையை தருகிறது.

ஊழலையும் புற்று நோயையும் சம்பந்தப் படுத்தி பேசியது மிகவும் தவறானது.   ஊழலை எப்போதுமே புற்று நோயோடு ஒப்பிட்டு பேசக் கூடாது.   எனவே நீங்கள் புற்று நோய் என்ற வார்த்தையை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும்.   மேலும் அதற்காக மன்னிப்புக் கோர வேண்டும்”  என தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையின் மருத்துவர் சாந்தாவுக்கு அவர் புற்று நோயாளிகளுக்கு தொண்டாற்றியதற்காக மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது