துரை

மிழக கோவில் வளாகத்தில் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தடை விதிதுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல முக்கிய கோவில்களின் வளாகத்தில் கடைகள் உள்ளன.   சென்ற மாதம் இரண்டாம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு பல கடைகள் நாசமாகின.    கோவில் வளாகத்தில் கடைகள் பெருகி உள்ளதால் தீயணைப்புப் பணிகளை நடத்த முடியவில்லை எனக் கூறப்பட்ட்து.   அதை தொடர்ந்து தமிழக இந்து அறநிலையத்துறை முக்கிய கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளை உடனடியாக காலி செய்ய நோட்டிஸ் அனுப்பியது.

கோவில் வளாகங்களில் கடை நடத்துவோர் சார்பில் இந்த நோட்டிசை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொட்ரப்பட்டது.    இதை விசாரித்த நீதிபதி பாரதி தாசன்,  கோயில் வளாகத்தில் கடை வைத்திருப்போருக்கு மாற்று இடம் வழஙக வேண்டும் என இந்தி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.    மேலும் இது குறித்து அந்தத் துறை இந்த மாதம் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அதுவரை கடைகளை காலி செய்ய நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனவும் ஆணையிட்டுள்ளார்.