மும்பை

ஸ்ரீதேவி வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருப்போர் ஹோலி கொண்டாட்டத்தை கொண்டாட மறுத்துள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டு நடிகையாக ஆரம்பித்து பாலிவுட்டில் புகுந்து உலகப் புகழ் பெற்ற நடிகை ஆனார்..    தமிழ்நாட்டைப் போலவே அங்கும் அவரை தன் குடும்பத்தினராக பல வட நாட்டினரும் நினைக்கிறார்கள்.   அவர் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் உள்ள கிரீன் ஏக்கர்ஸ் ஹவுசிங் சொசைட்டி என்னும் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வடநாட்டில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.   வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதி ஹோலி பண்டிகை வர உள்ளது.  அவருடன் குடியிருப்பவர்கள் அவருடைய மரணத்தினால் மிகவும் துயர் அடைந்துள்ளனர்.   அதனால் அந்த குடியிருப்பு வாசிகள் தங்களின் ஹோலி கொண்டாட்டம் இந்த வருடம் நடைபெறாது என அறிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]