
சென்னை:
நடிகர் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா சமீபத்தில் நடித்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் நாச்சியார்.
இந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜோதிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. திருமணத்திற்கு பிறகு, 36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற செலக்டிவான படத்தில் நடித்துவந்த ஜோதிகா, நாச்சியார் படத்தில் நடித்ததின் மூலம் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ‘செக்கச் சிவந்த வானம்’ என்னும் படத்தில் நடித்து வரும் அவர், புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
நடிகை வித்யாபாலன் நடித்த ‘தும்ஹாரி சுலு’ என்னும் இந்திப்படத்தின் தமிழாக்கத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா இன்று தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தை, ஏற்கனவே ஜோதிகாவை வைத்து மொழி படத்திய இயக்கிய ராதா மோகன் இயக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இந்த படத்தை பொஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]