காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பாலேஸ்வரத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் முதியோர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களது எலும்புகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை  இல்ல நிர்வாகி தாமஸ், அரசு மருத்துவமனையில் இருந்தே, அவர்கள் அனுமதியுடன்தான் முதியோர்களை எடுத்து வந்து பாதுகாத்தோம் என்று கூறினார். இதன் காரணமாக இந்த விஷயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் காய்கறி ஏற்றி வரும் வாகனத்தில், இறந்த முதியவரின் உடல் எடுத்து செல்லப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த கருணை இல்லம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியானது.

இந்நிலையில,  அந்த கருணை இல்லத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிய நிலையில் அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜு தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ததை தொடர்ந்து, காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முதியோர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்னும் இரண்டு நாட்களில் காப்பகம்   மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காப்பககத்தில் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், செயின்ட் ஜோசப் ஹாஸ்பைசஸ் என்ற பெயரில்  ஆதரவற்றோர் இறக்கும் தருவாயில் உள்ள அனாதைகள் இல்லத்தை நடத்தி வந்த பாதிரியார், தாமஸ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அனாதையாக சாலையோரமும், பாலத்திற்கு அடியிலும் கிடந்த உள்ள சிலரை பார்த்தபோது, அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நானும், சகோதரி ஒருவரும் சேர்ந்து கருணை இல்லத்தை தொடங்க முடிவு செய்தாகவும், அதற்காக அந்த சகோதரி தன்னிடம்  40ஆயிரம் பவுண்டு என்னிடம் கொடுத்து,  இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு ஆசிரமம் தொடங்க என்னிடம் கோரினார். அதன்படிதான் இந்த கருணை இல்லம்  தொட்ங்கிய தாகவும் கூறினார்.

மேலும், இது ஹாஸ்பைசிஸ் என்றும், ஹாஸ்பிட்டல் அல்ல என்று கூறிய அவர், தொடக்கத்தில், முதியோர் களை நாங்கள் தேடிப்போய் அழைத்து வந்து பாதுகாத்தோம், ஆனால் கடந்த சில வருங்களாக போலீஸ் அனுமதியுடன்தான் அவர்களை நாங்களை எடுத்துச்சென்று பாதுகாத்து வருவதாக கூறினார்.

அதுபோல  அரசு மருத்துவமனையில் அனாதையாக உள்ளவர்களை எடுத்துச்செல்லும்படி அங்கிருந்து தங்களுக்கு அழைப்பு வரும் என்றும், அப்போது அவர்களிடம் எழுத்துப்பூர்வமான டிஸ்சார்ஜ்  அனுமதியுடன் மட்டுமே அவர்களை எடுத்து நாங்கள் பாதுகாத்து வருகிறோம் என்றும்,

அரசு மருத்துவமனையில் அன்நவுன் பேஷன்ட் எடுத்து முதியோர்களுக்கும், அனா தைகளுக்கும் சிகிச்சை அளிப்பார்கள்… பின்னால் அவர்களை ஒரங்கட்டி வைத்திடுவார்கள் அதுபோன்ற நபர்களைத்தான் நாங்கள் எடுத்து வந்து பாதுகாத்தோம் என்றும் கூறினார்.

சென்னையில ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து இவ்வாறு அடிக்கடி ஆதரவற்ற முதியோர்களை எடுத்து வருவோம் என்றும் இதற்காக தினசரி எங்களது நிறுவன ஆம்புலன்சு மருத்துவமனைக்கு சென்று வரும் என்றும் கூறினார்.

ரோட்டில் விழுந்து கிடந்து நாய் மாதிரி  சாவை எதிர்நோக்கி உள்ளவர்களைத்தான் நாங்கள் மீட்டு பாதுகாத்து வந்தோம் என்றும் கூறினார்.

அவர்களை தினசரி காலையிலேயே குளிப்பாட்டி,  எங்களால் முடிந்தவரை நல்ல சாப்பாடு கொடுத்தும், காலை யில் டிபன், மதியம் நல்ல உணவும், இரவில்  டிபனும் கொடுப்போம், அவர்களுக்கு தேவையான மருத்துவ  உதவி செய்தும் பாதுகாத்து வந்தோம் என்று கூறினார்.

ஒருசிலர் மனநிலை சரியில்லாத நிலையிலும், அவர்களையும் நாங்கள் எடுத்து கொண்டு வந்து அவர்களை பாதுகாத்து வருகிறோம் என்றார். எங்கள் பேஷன்ஸ் 35 சதவிகிதம் பேருக்கு பிளாடர் கண்ட்ரோல் கிடையாது, பவர் கிடையாது.

இதன் காரணமாக அவர்களின் சிறுநீர் தானாகே கழியும் நிலையிலும், அவர்களை  போன்றவர்களுக்கு சேவை செய்ய என்னைப்போன்ற சகிப்பு தன்மை உடையவர்கள் வருவது மிக்குறைவு. அவர்களை கவனிக்கும் சேவையாளர்களுக்கு  நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளோம்  என்றும்,  நோயாளிகளுக்கு என்ன உணவு கொடுக்கிறோமோ அதைத்தான் நாங்களும் சாப்பிடுவோம் என்றும் கூறினார்.

பொதுமக்கள் உதவியுடன் இதை நடத்தி வருவதாக கூறும் அவர், இதற்கான காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் பொதுமக்களிடம் இருந்தே பெற்று வருவதாகவும் கூறினார்.

னால்,  வெளி நாட்டில் இருந்து வரும் நிதியை கொண்டு நடத்தப்படும் இந்த தொண்டு நிறுவனத்தில் மரணம் அடையும் முதியவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதில்லை என்றும், அதற்கு மாறாக,  சுவர்களில் கல்லறை போன்று அமைக்கப்பட்ட அறைகளில் உடல்கள் வைக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து அவர்களது எலும்புகளை எடுத்து பதப்படுத்தி அதனை வெளிநாடுகளுக்கு கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெளிநாடுகளில் மருந்து மாத்திரைகள் தயாரி செய்ய, இறந்தவர்களின் எலும்புகள்  சட்ட விரோதமாக கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில் மத்திய மாநில அரசு  அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 3 மாதங்களில் இந்த கருணை இல்லத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்தே, அரசு அனுமதியுடன்தான் ஆதரவற்ற முதியோர்களை எடுத்து வந்தததாக நிறுவன தலைவர் தாமஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முறைகேடான செயலுக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களும் உதவி செய்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.