மும்பை:

மும்பையில் உள்ள நடிகை ஸ்ரீதேவி வீடு முன்பு ரசிகர்கள் சோகத்துடன் குவிந்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவி நேற்று நள்ளிரவு துபாயில் மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் இன்று இரவுக்குள் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து மும்பையில் உள்ள ஸ்ரீதேவி வீடு முன்பு ரசிகர்கள் சோகத்துடன் குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[youtube-feed feed=1]