சென்னை:

மிழகத்தில் 7 அரசு பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தத்தெடுக்கிறது என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் காரணமாக  ஆசிரியர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எடப்பாடி தலைமையிலான அரசு பதவி ஏற்றத்தில் இருந்து, தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரப்போவதாக தமிழக கல்வி அமைச்சர் அதிரடியாக தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே நீட் பயிற்சி மையம், பாடத்திட்டங்கள் மாற்றம், பல்வேறு வகையான பரிசு, விருதுகள் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தற்போது, தமிழகத்தில் 7 அரசு பள்ளிகளை பிரபல கம்ப்யூட்டர் ஓஎஸ் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோபாப்ட்  தந்தெடுக்க இருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தப்படி, தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அனுமதியும்,  தமிழக பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

இது தொடர்பான ஒப்பந்தம்  தலைமை செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித்துறை  இடையே ன்று  கையெழுத்தானது.