சென்னை:

ச்சநீதி மன்றத்தில் காவிரி தீர்ப்பு விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஓரணியில் திகழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்க இதற்கு தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு  தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று காலை 10:30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் திமுக உள்பட 30 அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும், 9 அமைப்புகள், 14 விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற வந்த இந்த கூட்டத்தில், இறுதியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அப்போது,  காவிரிக்காக தமிழக அரசியல் கட்சியினர் ஓரணியில் திகழ் வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், காவிரி பிரச்சினையில் தமிழக அரசு எடுத்து வந்த நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்ட எடப்பாடி பழனிச்சாமி, முக்கிய பிரச்சினையில் அனைத்துக்கட்சியினரும் ஒருமித்த கருத்துடன் பாடுபட வேண்டும்.

நம்மிடையே  கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காவிரிப் பிரச்சினை ஒட்டு மொத்த தமிழகத்தின் உணர்வுகளுடன்  பின்னி பினைந்துள்ளது என்றார்.

இன்று பேசிய அனைத்துக்கட்சி தலைவர்களின் கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், அது குறித்து ஆராய்ந்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி பிரச்சினையில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் தமிழகத்திற்காக ஒட்டுமொத்தமாக இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.