நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவர்களது முகநூல் பதிவு:

ய்யத்தில் பாரதி கிருஷ்ணகுமார் இணைந்திருப்பது பற்றி பல தோழர்களும் அதிர்ச்சி, ஆதங்கம், கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு துக்கம் விசாரிப்பது போல் பேசுகிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சி அவரை உரிய முறையில் கவனிக்காததால்தான் அவர் அங்கே போய்விட்டாரா என்று கேட்டார் ஒரு அன்பர். பி.கே. எடுத்த முடிவில் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.

எந்தக் கட்சியை ஆதரிப்பது, இணைந்து செயல்படுவது என்பது குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. அந்த உரிமை அவருக்கும் இருக்கிறது. நாங்கள் இருவருமாக அறிமுகமாகிற இடங்களில், “கல்லூரியில் இவர் எனக்கு சீனியர்,” என்று என்னைப் பற்றிக் கூறுவார். “இயக்கத்தில் இவர் எனக்கு சீனியர்,” என்று நான் அவரைப் பற்றிக் கூறுவேன்.

பல ஆண்டுகளாக அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இல்லை. உறுப்பினர் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளாமல் விட்டு விட்டார். கட்சியின் வழிகாடடலில் இயங்கும் சில அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார் என்றாலும் பின்னர் அவற்றிலும் தொடரவில்லை. தொடர வேண்டும் என இயக்கம் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை, அவரும் அதில் ஆர்வம் காட்டவில்லை.

ஆயினும் அந்த அமைப்புகளின் கருத்தரங்கம், கலை இரவு போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்புரையாளராகப் பங்கேற்று வந்தார். அப்போது தன்னை ஒரு நட்சத்திரமாக வைத்துக்கொண்டு, போகிற இடங்களில் ஒரு ரசிகர் வட்டம் போல் ஏற்படுத்தி வந்தார் என்ற விமர்சனம் வந்தது.

ஆயினும், கூட்டத்தில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் அவர்களைச்சிரிக்கவும், கதறியழவும், கொந்தளித்து எழவும் செய்யக்கூடிய அரிய, அவருக்கே உரிய பேச்சாற்றல் காரணமாக, அதன் அடிப்படை பலமாக அவருக்கு உள்ள வாசிப்பு காரணமாக, அமைப்புகள் அவரைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தன. முற்போக்குச் சிந்தனைகளை அவர் முன்வைத்த விதம் பலரையும் அமைப்புகளுக்கு உள்ளேயே கூட ஈர்த்தது என்பதும் உண்மை.

திரைப்பட முயற்சிகளில் இறங்கிய அவர், குறிப்பிட்ட காலத்தாக்கத்திற்கு மேல் ஏற்பட்ட கலை வெளிப்பாட்டு வடிவ மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை. அதனால் அவரது படம் பேசப்படவில்லை.

ஆனால் அவர் உருவாக்கிய ‘ராமய்யாவின் குடிசை’ உள்ளிட்ட ஆவணப்படங்கள் முக்கியமானவை. அந்தப் படங்களைத் தனிப்பட்ட முறையில் நான் பார்க்க வேண்டும், ‘தீக்கதிர்’ ஏட்டில் எழுத வேண்டும் என்று மிகவும் விரும்புவார். நானும் ஒரு லயிப்புடன் எழுதியிருக்கிறேன்.

அந்த ஆவணப்படங்கள் வரலாற்று உண்மைகளையும் மக்களின் வாழ்நிலையையும் இயக்கத்தின் கண்ணோட்டத்தில் பேசின என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு இயக்கத்தின் மூலம் அவற்றைச் சந்தைப் படுத்துவதற்குக் கிடைத்த தளமும் மறுக்க முடியாதது. இனிமேல் அந்தச் சந்தையும் உரை மேடைகளும் அவருக்கு இன்னும் விரிவாகக் கிடைக்கலாம். அதை அவர் குறிவைத்திருககலாம் அல்லது உண்மையிலேயே கமல் தலைமையில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம். யாருக்குத் தெரியும், அவரையல்லாமல்?

ஆயினும் இத்தனை காலமாக நடந்து வந்த பாதையின் அனுபவ மைல் கற்களையும், அமைப்பு சார்ந்த புரிதல்களையும் மய்யத்தின் கொள்கைகளை வகுப்பதில் அதன் உயர்மட்டக்குழு உறுப்பினர் என்ற முறையில், பயன்படுத்துவாரா? அல்லது, இடதா வலதா என்ற இஸம் அல்லாத மய்யமே தனது இயக்கம் எனக்கூறும் கமல் பேச்சுகளுக்கு விளக்கம் அளிக்கிற பரப்புரையாளராக மட்டும் இருப்பாரா?

பார்க்கத்தானே போகிறோம்.